நடிகை ரன்யாராவ் தங்கம் கடத்திய வழக்‍கு - சிபிஐ விசாரணைக்‍கு மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னட நடிகை ரன்யா ராவின் தங்க கடத்தல் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ், கர்நாடக காவல்துறை ஏ.டி.ஜி.பி., ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள். இவர், கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில், 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.80 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தார். அவரை, விமான நிலையத்தில், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம் 17.29 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் தற்போது சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Night
Day