6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - தமிழாசிரியர் போக்சோவில் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றும் சுரேஷ், சில நாட்களுக்கு முன் ஆறாம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் விசாரித்த போது நடந்தது குறித்து தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தமிழாசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day