பின்னடைவை சந்தித்து வரும் "இந்தியன் 2" - படக்குழு அதிர்ச்சி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் 2வது நாளில் 42 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'இந்தியன் 2' திரைப்படம் கடந்த 12ம் தேதி உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 2ம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் உலக முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 42 கோடியே 30 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day