சினிமா
திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்..!
தனது 75வது பிறந்தநாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகா?...
நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 171வது திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதையடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தின், முதற்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக, கதை எழுதும் வேலையில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படம், ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்படவுள்ளதாகவும், 3டி முறையில் படத்தை வரும் 2025 ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனது 75வது பிறந்தநாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகா?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...