ரூ.25 கோடி இழப்பீடு - உதயநிதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏஞ்சல் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால், 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி கதாநாயகனாக நடிக்க, , ஏஞ்சல் என்ற படத்தை தயாரித்ததாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார். ஒப்பந்தப்படி, எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிடுமாறு கோரியிருந்தார். தனி நீதிபதி இந்த உத்தரவை எதிர்த்து ராமசரவணன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை, விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், மற்றும் குமரப்பன் அமர்வு துணை முதல்வர் உதயநிதி பதிலளிக்க உத்தரவிட்டது.

Night
Day