4K தொழில் நுட்பத்தில் வரும் 29ம் தேதி ரீ-ரிலீஸாகும் "அழகி"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதல் காதலை மையமாக கொண்டு, கடந்த 2002 ம் ஆண்டு வெளியான "அழகி" திரைப்படம் வரும் 29ம் தேதி புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸாகவுள்ளது.  கடந்த 2002 ஆம் ஆண்டு பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் வெளியானது "அழகி" திரைப்படம்.  தங்கர் பச்சான் தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், எழுதிய "கல்வெட்டு" எனும் சிறுகதையை மையப்படுத்தி, இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார். இப்படம், 4K, தொழில் நுட்பத்தில் புதுப்பொலிவுடன் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகவுள்ளது.  

varient
Night
Day