''போதைப் பொருள் கடத்தல் வழக்கு - கோபாலபுரம் கதவு விரைவில் தட்டப்படும்'' - எல்.முருகன் அதிரடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கோபாலபுரத்தின் கதவை தட்டும் நேரம் வந்து விட்டதாக மத்திய அமைச்சரும் நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் கூறியுள்ளார்.

உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  கூக்கல்தொரை, அஜ்ஜூர், கக்குச்சி, தும்மனட்டி உள்ளிட்ட படுக சமுதாய மக்கள் வாழும் கிராமங்களில் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றார்.. போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய திமுக மற்றும் விசிக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். திமுக மற்றும் விசிக அரசியலில் மட்டுமல்லாமல் போதைப் பொருள் கடத்தலிலும் கூட்டணி வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், திரைப்பட இயக்குனரிடம் டெல்லியில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விரைவில் கோபாலபுரத்தின் கதவை தட்டும் நேரம் வந்து விட்டதாகத் தெரிவித்தார்.

Night
Day