போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் இறுதிக்கட்டத்தில் மெட்ரோ பணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஆளுயர தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இதில், முதற்கட்டமாக போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் ஆளில்லா மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் உள்ள 10 ரயில் நிலையங்களில் ஆளுயர தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Night
Day