அண்ணா பல்கலை.விவகாரம் - தமிழக அரசைக் கண்டித்து டெல்லியில் ஏ.பி.வி.பி அமைப்பினர் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 மணி நேரமாக நடைபெற்ற தேசிய மகளிர் ஆணைய குழு விசாரணை நிறைவு பெற்றது.

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது. அதன்படி, டெல்லியில் இருந்து வந்துள்ள தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை விசாரணையை தொடங்கினர்.

மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்ட அதிகாரிகள், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள்,  குறிப்பாக மாணவிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி, பல்கலைக் கழக மாணவர்கள், வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் உள்பட வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் தேசிய மகளிர் ஆணைய குழு விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின்னர், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தேசிய மகளிர் ஆணையத்துக்கு இந்தக் குழு பரிந்துரைக்க உள்ளது.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து டெல்லியில் ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர், கையில் பதாகைகளை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Night
Day