கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, துாத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, துாத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளைய தினம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் மட்டும் கனமழை பெய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Night
Day