முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி

எழுத்தின் அளவு: அ+ அ-

நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக 24 அடி கொள்ளளவான செம்பரம்பாக்கம் ஏரி 22.55 அடியை எட்டியிருப்பதால் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதரமான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பொழிவு இல்லை என கூறப்படுகிறது. இருந்தபோதிலும், ஏரிக்கு நீர்வரத்து 794 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 24 அடி கொண்ட ஏரியின் கொள்ளளவு தற்போது 22.55அடியாக உள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் வெளியேற்றத்தின் அளவும் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Night
Day