காஞ்சிபுரம் - 20 ஏரிகள் ஒரேநாளில் முழு கொள்ளளவை எட்டின - விவசாயிகள் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 20 ஏரிகள் ஒரேநாளில் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. இதில் 164 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதாகவும், 167 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. 274 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும், 222 ஏரிகள் 25 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும், 80 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Night
Day