கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக, இயற்கை அழகை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. வார விடுமுறையில் அங்கு ஏராளாமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில்  அதிகளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்தனர். பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்களை பார்ப்பதற்கு சென்ற நிலையில் அங்கு கடும் பனிமூட்டம் நிலவியதால் இயற்கை அழகை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

varient
Night
Day