ரயில் நிலையத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், ஐ பேட் திருட்டு - இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 மடிக்கணினி மற்றும் 'ஐ பேடை' திருடிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அரக்கோணம் டிஃபன்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் என்பவர் பணி நிமித்தமாக புதுச்சேரி சென்றுவிட்டு ஊர் திரும்புவதற்காக அங்குள்ள ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் பயணச்சீட்டு வாங்கிவிட்டு திரும்பி வந்தபோது, அங்குள்ள இருக்கையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப் மற்றும் i pad வைத்திருந்த பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் ஓதியஞ்சாலை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சீர்காழியை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்தனர்.

Night
Day