சிவகங்கை: புத்தாண்டு புதுமழையை தொடர்ந்து பொன்-ஏர் பூட்டும் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்திரை தமிழ் புத்தாண்டு புது மழையை தொடர்ந்து பாரம்பரிய பொன்னேர் பூட்டும் திருவிழா நடைபெற்றது.

சிங்கம்புணரி பகுதியில் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதிக்குப் பிறகு பெய்யும் முதல் மழை அந்தாண்டின் புதுமழை என்றும் உத்தமழை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இப்பகுதி விவசாயிகள் புதுமழை பெய்த பிறகே விவசாய பணிகளை தொடங்குவர். அதன்படி ஏப்ரல் 22-ஆம் தேதியில் இப்பகுதியில் புதுமழை பரவலாக பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து கிராமத்தினர் நல்லநாள், நேரம் பார்த்து சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலுக்கு சொந்தமான விளைநிலத்தில் கோயில் மாடுகளை கொண்டு வழிபாடு செய்து விவசாயப் பணிகளைத் தொடங்கினர்.

Night
Day