சென்னையில் தங்கம் சவரன் ரூ.360 உயர்ந்து, ரூ.52,360-க்கு விற்பனை - பொதுமக்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 52 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்றும் 360 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 545 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 84 ரூபாய்க்கும், கிலோ 84 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டுவதால் நகை பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். 

Night
Day