சென்னையில் தொடரும் மழை - மக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  பெய்து வரும் பலத்த மழை காரணமாக முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதன்காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மடுவாங்கரை பிள்ளையார் கோயில் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், சிறு மழைக்கே சாலைகளில் மழை நீர் தேங்குவதாக மக்கள் குற்றச்சாட்டினர்.

அதே போல், சென்னை வள்ளுவர்கோட்டம் சுற்றுவட்டார பகுதிகளில்  பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

சென்னையில் தொடர்ந்து அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வேளச்சேரி பகுதியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

சென்னையில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும், பராமரிப்பு இல்லாத மழைநீர் வடிகாலால் மழை நீர் சாலைகளில் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை கோடம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்யாததால் ஆங்காங்கே பொதுமக்களே சரி செய்யும் சூழலால் உருவாகியுள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மழை நீர் வடிகால் பணிகள் செய்யப்பட்டதாக விளம்பர திமுக அரசு நாடகமாடுவதாக மக்கள் குற்றச்சாட்டினர்.

Night
Day