IPL Mini Auction - ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீன் ஏலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் தொடங்கி உள்ளது. ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை 25 கோடி ரூபாய்க்கும், மதீஷா பத்திரனாவை 18 கோடி ரூபாய்க்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

10 அணிகள் பங்கேற்கும் 19வது ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. 10 அணிகளும் மொத்தம் 173 வீரர்களை தக்க வைத்துள்ளன. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 350 வீரர்கள் பதிவு செய்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் தொடங்கி உள்ளது. 

இதில், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும், இலங்கை வீரர் மதீஷா பத்திரனாவை 18 கோடி ரூபாய்க்கும், நியூசிலாந்து வீரர் பின் ஆலனை 2 கோடி ரூபாய்க்கும் கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. 

இந்திய அணி வீரர் வெங்கடேஷ் ஐயரை 7 கோடி ரூபாய்க்கும், நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டஃபியை 2 கோடி ரூபாய்க்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ளது. 

ஆன்ரிச் நார்ட்ஜே மற்றும் வனிந்து அசரங்கா ஆகியோரை தலா 2 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியும்,

டேவிட் மில்லர் மற்றும் பென் டக்கட்டை தலா 2 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியும் ஏலம் எடுத்துள்ளது.

மேற்கு இந்திய தீவுகள் அணியின் இளம் வீரர் அகீல் ஹொசைனை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

தென்னாப்ரிக்கா வீரர் குயின்டன் டி காக்கை ஒரு கோடி ரூபாய்க்கு மும்பை அணியும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாயை 7 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியும் ஏலம் எடுத்துள்ளது.

Night
Day