சென்னையில் தொடர்ந்து குறையும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.800 குறைந்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் 800 ரூபாய் குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் நாள்தோறும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஆபரண தங்கம் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்த நிலையில், இன்று மேலும் 800 ரூபாய் குறைந்து, 53 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 650 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, 96 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 96 ஆயிரத்து 500க்கும் விற்கப்படுகிறது. 

Night
Day