சென்னை திரும்பிய 27 காரைக்கால் மீனவர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டிருந்த 27 மீனவர்கள் விடுதலையாகி சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். 

கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மற்றும் கரைக்கால் மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், தற்போது மீனவர்கள் 27 பேரும் விடுதலையாகி சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து இதுபோன்ற நிலைமைக்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவித்தனர். சிறையில் இருந்து தங்களை விடுதலை செய்வதற்காக ஜே.சி.எம் மக்கள் மன்றம் மற்றும் ஜோஸ் சார்லஸ் மார்டின் என்பவர் இணைந்து கடுமையாக போராடி வெளியில் கொண்டு வந்துள்ளதாக  அவர்கள் தெரிவித்தனர். 

தாங்கள் சிறையில் இருந்த போது தங்களுக்கு உணவு உள்ளிட்ட தேவையான வசதிகளை செய்து கொடுத்து உதவியது மட்டுமல்லாமல், தங்களை தொடர்ந்து கண்காணித்து, கடந்த ஒரு மாதங்களாக தங்களது குடும்பத்திற்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டனர். இன்னும் சிலர் சிறையில் இருப்பது தங்களுக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாக அவர்கள் கூறினர். தங்களின் படகுகளை அவர்கள் சிறை பிடித்துள்ளதால் வாழ்வாதாரம் முடக்கியுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்த மீனவர்கள், இலங்கை அரசிடம் பேசி சுமூகமான முடிவை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்துள்ளனர். 

varient
Night
Day