ஜெயா ப்ளஸ் செய்தி எதிரொலி - டேங்கர் லாரி மூலம் மாஞ்சோலை நாலுமுக்கு தேயிலை தோட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை நாலுமுக்கு தேயிலை தோட்ட மக்களுக்கு ஜெயா பிளஸ் செய்தி எதிரொலியாக பேரூராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மோட்டார் பழுதால் சுமார் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் இல்லாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனையடுத்து, மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகம் மூலம் டேங்கர் லாரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், பழுதான குடிநீர் குழாய்கள் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Night
Day