ஞானசேகரனை இயல்பாக நடமாட எப்படி அனுமதித்தீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி, பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள நிலையில், தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் சுதந்திரமாக நடமாடவிட்டது ஏன் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் மம்தா குமாரி உள்ளிட்ட குழுவினர் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையை முடித்து கொண்டு இன்று விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டனர். இதனிடையே தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து  தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்தார். விசாரணை அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஞானசேகரன் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நிலையில், தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை சுதந்திரமாக நடமாடவிட்டது ஏன் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Night
Day