டெங்கு காய்ச்சல் - சிறுமி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே டெங்கு காய்ச்சலால் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த ராஜகுரு-அமுல் தம்பதியின் 6 வயது மகள் யாத்திகா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை விஷக்காய்ச்சல் அறிகுறியுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாத்திகாவுக்கு, பரிசோதனைகள் மூலம் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் யாத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அதே மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் ஒன்பது பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

varient
Night
Day