எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 -வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுக்கு 6 சதவீதம் மின்கட்டண உயர்வு ரத்து செய்ய வேண்டும், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், ஜவுளி உற்பத்தியாளர்களை மாவட்ட நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ,கோவை மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் செய்யும் விசைத்தறியாளர்கள் நேற்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்வதால் அவிநாசி, நம்பியம்பாளையம், கருவலூர், புதுப்பாளையம் ,பெருமாநல்லூர், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு 30 லட்சம் காடா துணி உற்பத்தியும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இழப்பும் ஏற்பட்டுள்ளதோடு மூன்று லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.