திருப்பூர் : அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 5 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருப்பூரை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது 60வது திருமண நிகழ்ச்சியை திருக்கடையூரில் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். பின்னர், அவர்கள் காரில் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த கார் ஓலப்பாளையம் அருகே வந்தபோது, எதிரே வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த சந்திரசேகரன், மனைவி சித்ரா, இளைய மகன் இளவரசன், மருமகள் அரிவிவித்ரா, 3 மாத கைக்குழந்தை ஷாக் ஷி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூத்த மகன் சசிதரன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டி சென்றவர் சில நொடிகள் கண் அயர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Night
Day