பிரதமர் மோடியின் ரோடு ஷோ அனுமதியை ரத்து செய்க - காங்கிரஸ் மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொய்யான தகவலை கூறி அனுமதி பெறப்பட்டுள்ளதால் பிரதமர் மோடியின் ரோடு ஷோ அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவிடம் மனு அளித்துள்ளனர்.

இன்று தமிழ்நாடு வர உள்ள பிரதமர் மோடி, சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் வாகனத்தில் இருந்தபடி பாஜகவினரை பார்த்து கை அசைத்து தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதனிடையே, சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவை சந்தித்த காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவை சார்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்  பாஜகவினர் தேர்தல் நேரத்தில் தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை பிரதமர் மோடி பார்வையிட வருவதாகக்‍ கூறி தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி பொய்யான தகவலை கூறி சென்னையில் நடைபெற உள்ள ரோடு ஷோவிற்கு அனுமதி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Night
Day