நிவாரணம் வழங்காததால் ஆத்திரம் - பேருந்து சிறைபிடிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்காத விளம்பர திமுக அரசைக் கண்டித்து, கிராம மக்கள், அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்துள்ள பாதிக்கப்பட்ட மக்கள், நாள்தோறும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், மயிலம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளத்துமேடு கிராம மக்களுக்கு இதுவரை 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நிவாரணம் வழங்காத விளம்பர திமுக அரசைக் கண்டித்தும் நிவாரணமாக வழங்கிய அரிசியும் தரமற்று இருப்பதாக குற்றம்சாட்டியும் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளம்பர திமுக அரசு வெள்ள நிவாரணமாக தங்களுக்கு வழங்கிய தரமற்ற அரிசியை பாத்திரத்தில் வைத்துக் கொண்டு ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர், விளம்பர திமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Night
Day