பட்ஜெட் குறித்து மட்டுமே பேச விரும்புகிறேன், தமிழக ஊழல்கள் பற்றி பேச விரும்பவில்லை - நிர்மலா சீதாராமன்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தொடர்பான விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பட்ஜெட் தொடர்பாக விளக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் சிங்கப்பூரில் திருவள்ளுவர் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், திமுகவும் காங்கிரசும் இதனை செய்ததில்லை என்றும் குற்றம்சாட்டினார். மத்திய அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளையில், அதனை திசை திருப்பும் நோக்கில் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை போன்ற பிரச்சனைகளை பேசி வருவதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், பட்ஜெட் குறித்து மட்டுமே தான் பேச விரும்புவதாகவும், தமிழக ஊழல்கள் பற்றி தான் பேச விரும்பவில்லை என்றும் மறைமுகமாக விளம்பர திமுக அரசை குற்றம் சாட்டினார்

Night
Day