பிரதமர் வீட்டு வசதி திட்ட மானியம் வழங்கியதில் ரூ. 54.40 லட்சம் முறைகேடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் வீட்டு வசதி திட்ட மானியம் வழங்கியதில் 54 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே 25 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நலத்திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையா? என்றும் புகார் அளித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த முறைகேடு தொடர்பான விசாரணை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

Night
Day