புதுச்சேரி : பிரச்சாரக் கூட்டத்தில் உளறிக் கொட்டிய உதயநிதி ஸ்டாலின்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், அங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து விரிவாக காணலாம்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுயில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய உதயநிதி, தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தமிழகத்தைபோல, புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் துவங்கப்படும்,  பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.

ஆனால், இந்தியாவிலேயே புதுச்சேரியில் தான் கடந்த 2002 ஆம் ஆண்டு ரொட்டி பால் திட்டம் என்ற பெயரில் காலை உணவு திட்டம் முதல் முதலில் தொடங்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி அமைந்ததை தொடர்ந்து, மாணவர்களுக்கு ரொட்டி பால்க்கு பதிலாக காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் என முடிவு செய்து கடந்த 2020ஆம் ஆண்டு, அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும், திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதியை அழைத்து அன்றைய தினம் மட்டும் மாணவர்களுக்கு இட்லி, பெங்கல், சாம்பார், சட்னி, கேசரி என சிற்றுண்டி வழங்கப்பட்டன. பின்னர் அத்திட்டம் கிடப்பில் போட்டப்பட்டது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கபட்டு வருவதோடு மாலை சிறுதானிய சிற்றுண்டியும் வழங்கப்பட்டு வருகிறது.

இது கூட தெரியாமல் தமிழகத்தில்தான் முதல் முதலில் சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும், புதுச்சேரியிலும் ஆரம்பிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது அவரது அரசியல் ஞாணம் எந்த அளவிற்கு உள்ளது தெரியவந்துள்ளது. 

பெண் பிள்ளைகள் கல்லூரியில் சேர்ந்தால் மாதம் ரூபாய் ஆயிரம் தமிழக அரசு கொடுக்கும் நிலையில், புதுச்சேரியில் பெண் குழந்தை பிறந்தாலே அவர்கள் பெயரில் அரசு 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதியாக வைக்கிறது. அதேபோல், தமிழகத்தற்கு முன்பாகவே, புதுச்சேரியில் மாதாமாதம் 60 ஆயிரம் பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.

இதெல்லாம் தெரியாமல் திமுக வெற்றிபெற்றோல் அதை  நிறைவேற்றுவோம் இதை நிறைவேற்றுவோம் என உளறிக்கொட்டியுள்ளார் உதயநிதி.

அதே போல் நாட்டின் எய்ம்ஸ் க்கு நிகராக புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில், எய்ம்ஸ் செங்கல்லை வைத்து, மருத்துவமனை கட்டவில்லை - செங்கலை திருடிக் கொண்டு வந்தேன் என அரைத்த மாவையே அரைத்தது கூட்டத்திற்கு வந்தவர்களை கடுப்பேத்தினார் உதயநிதி. 

உதயநிதியின் உளறலை பொறுக்க முடியாமல், அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் இருந்த பெண்கள், புதுச்சேரியை பற்றி ஒன்றும் தெரியாமல் உதயநிதி உளறி வருவதாக முனுமுனுத்தபடி கலைந்து சென்றனர்.

பிரச்சாரத்திற்கு போகும் இடத்தில் வெற்று அறிவிப்புகளை அறிவிக்கும் முன்னர், அந்த திட்டம் அங்கு அமலில் உள்ளதா என்பது கூட தெரியாமல், வாய்க்கு வந்ததை உளறும் உதயநிதியின் செய்கையால் பொதுமக்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் கூட அதிருப்தி அடைந்துள்ளனர். 

varient
Night
Day