எழுத்தின் அளவு: அ+ அ- அ
இயக்கத்தின் நலனுக்காக அயராது பாடுபடும் வடசென்னை துறைமுகம் பகுதியைச் சேர்ந்த மிகச் சிறந்த செயல் வீரர் திரு. மின்னல் ரவியின் தாயார் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வடசென்னை, துறைமுகம் பகுதியைச் சேர்ந்த திரு .மின்னல் ரவியின் தாயார் அஞ்சலை அம்மையார் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
அன்பு சகோதரர் திரு. மின்னல் ரவி, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் - தங்கள் இயக்கத்தின் நலனுக்காக அயராது பாடுபடுகின்ற ஒரு சிறந்த செயல்வீரர் - தனது தாயை இழந்த இந்த கடினமான நேரத்தில் திரு.மின்னல் ரவிக்கு இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியையும், மன வலிமையையும் கொடுக்க ஆண்டவனை வேண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது தாயை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.மின்னல் ரவிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.