விழுப்புரம்: அங்கன்வாடி திறப்பு விழா - அமைச்சர் செஞ்சி மஸ்தான் வருகை தாமதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அங்கன்வாடி திறப்பு விழாவிற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வருகை தாமதமானதால் குழந்தைகள் பசியால் வாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி திறப்பு விழா காலை 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் 12.30 மணியை தாண்டியும் விழாவிற்கு வராததால் அங்கன்வாடி குழந்தைகள் பசியால் வாடினர். இதையடுத்து அங்கன்வாடி பணியாளர் அவசர அவசரமாக பிஸ்கட் பொட்டலங்களை குழந்தைகளுக்கு வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

varient
Night
Day