வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12.30 லட்சம் மோசடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 12.30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

திட்டச்சேரியை சேர்ந்த இளம்பரிதி என்பவருடன் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மற்றும் அவரது சகோதரி ஆனந்தி உட்பட 7 பேரிடம் 4 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் வாங்கிய ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து இளம்பரிதி குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், போலீசார் ராமலிங்கம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பல்கேரியா வேலைவாய்ப்பு பெயரில் இளம்பரிதி உட்பட 3 பேரிடம் 12 லட்சத்து 30 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் தலைமறைவாக உள்ள 6 பேரை தேடி வருகின்றனர். 

Night
Day