ஒப்பந்த பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த சூப்பர்வைசர்கள் மற்றும் மேலாளரை திடீர் பணி நீக்கம் செய்ததால் மற்ற பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இம்மருத்துவமனையில் தூய்மை பணி மற்றும் காவல்பணிக்காக 400 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை கண்காணிப்பதற்காக 12 சூப்பர்வைசர்கள் மற்றும் மேலாளர் ஒருவர் பணியில் இருந்தார். தற்போது சூப்பர்வைசர் மணிகண்டன், ராஜ்குமார், மாயவேல் உட்பட மேலாளர் மங்களசுந்தரி ஆகியோர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பணி நீக்கத்தை கண்டித்தும், தங்களுடைய பணி பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டியும் மற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Night
Day