தவறான சிசிக்சையால் 4 வயது குழந்தை உயிரிழந்தாக பெற்றோர் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 4 வயது குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
முகப்பேர் MMM மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு வயது பெண் குழந்தை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இறந்து விட்டதாக குற்றஞ்சாட்டிய பெற்றோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெற்றோர், குழந்தைக்கு ஒன்றரை வயதில் இருந்து நிமோனியா என்ற நோய் இருந்ததாகவும், வேறொரு மருத்துவரின் ஆலோசனைப்படி MMM மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்ததாகவும் கூறினர். அனைத்து டெஸ்டையும் எடுத்துவிட்டு பிறகு குழந்தைக்கு எந்த ஆபத்தும் கிடையாது என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தனர். ஆனால் ஆபரேஷன் தொடங்கிய சில நிமிடங்களிலே குழந்தை இறந்து விட்டதாகவும், தவறான சிகிச்சையால் மட்டுமே குழந்தை உயிரிழந்ததாகக் கூறி பெற்றோர் கதறி அழுதனர். 

Night
Day