விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
அரசியல்வாதி ஒருவர் கொடுத்த அழுத்தத்தால், ஆந்திர கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய நேர்ந்ததாக ஹனும விஹாரி குற்றம் சாட்டியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை போட்டியில் ஆந்திர கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ஹனும விஹாரி பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் அணியை வெற்றி பெற வைத்தார். அந்த போட்டியின்போது 17வது வீரர் ஒருவரை தான் கடிந்து கொண்டதால், அவரின் அரசியல்வாதி தந்தை, தன்னை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்குமாறு ஆந்திர கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்ததாக ஹனும விஹாரி குற்றம் சாட்டியுள்ளார். அந்த அரசியல்வாதியின் அழுத்தம் காரணமாக தன்னை கேப்டன் பொறுப்பில் இருந்து வலுக்கட்டாயமாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் ராஜினாமா செய்ய வைத்ததாகவும் விஹாரி குற்றம் சுமத்தியுள்ளார்.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...