காவலர் வீட்டிற்குள் புகுந்து வெறிச்செயல்.. இளைஞர் ஓட,ஓட வெட்டி படுகொலை!

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் காவலர் குடியிருப்பில் உள்ள காவல்துறை அதிகாரி வீட்டிற்குள் நுழைந்து இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீரங்கம் அருகே பீமநகர் மார்சிங் பேட்டை பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள சாலையோரம் தாமரை செல்வன் என்ற இளைஞர் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட துரத்தி சென்றது. தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காத தாமரை செல்வன் அருகில் இருந்த காவலர் வீட்டிற்குள் நுழைந்து  தஞ்சம் அடைந்தார். ஆனாலும் காவலர் வீடு என்றும் பார்க்காத அந்த கும்பல் இளைஞரை துடிக்கதுடிக்க வெட்டிக் கொலை செய்தது. 

இதனால் தாமரை செல்வன் ரத்த வெள்ளத்தில் சரிந்து நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் 24 வயதான தாமரைச்செல்வன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளது. தமிழக முதலமைச்சர் திருச்சிக்கு வருகை புரிந்துள்ள நிலையில், காவலர் குடியிருப்பு வளாகத்தில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day