எழுத்தின் அளவு: அ+ அ- அ
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் குழந்தைகள், உயிரை பணயம் வைத்து காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், பாலம் கட்ட 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 3 ஆண்டுகளாகியும், இதுவரை எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உயிரை பணயம் வைத்து பள்ளி குழந்தைகள் ஆற்று வெள்ளத்தை கடந்து செல்லும் காட்சிகள் தான் இவை.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள், மலைகளில் விவசாயம் செய்து, அதனை நகர் பகுதிகளில் கொண்டு வந்து, விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். இதே போல், இவர்களின் குழந்தைகள் மலைப்பகுதியிலிருந்து குறைந்தது 3 முதல் 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே பள்ளிகளுக்கு செல்லும் அவல நிலையும் காணப்படுகிறது.
சில இடங்களில் ஆற்றில் இறங்கி அதனை கடந்து வர வேண்டிய நிலையில் உள்ளனர். அதிலும் மழை காலங்கள் என்றால், இவர்கள் உயிரை பணயம் வைத்து வரும் சூழல் நிலவுகிறது.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அப்பகுதி மலையில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களின் குழந்தைகள்,பள்ளிக்கு செல்ல கோதையாற்றின் காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி உயிரை பணம் வைத்து ஆற்றை கடக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில், அங்கு வாழ்ந்து வரும் மலை வாழ் மக்கள் நகர் பகுதிகளுக்கு வந்து செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் ஆற்றின் குறுக்கே, பாலம் கட்ட 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 3 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் இந்த மலைவாழ் மக்களின் உயிரோடு விளையாடாமல் இனியாவது இந்த விளம்பர அரசு பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.