தனது இல்ல நிகழ்ச்சிக்கு சின்னம்மாவுக்கு அழைப்பிதழ் கொடுத்த நடிகர் ஜெயராம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல நடிகர் ஜெயராம், தனது இல்லத் திருமண வரவேற்பு விழாவுக்கான அழைப்பிதழை, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வழங்கினார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துவரும் முன்னணி நடிகர் ஜெயராம் - அஸ்வதி தம்பதியினரின் மகன் காளிதாசுக்கும்,  ஹரிஹர்ராஜ் காளிங்கராயர் - ஆர்த்தி தம்பதியினரின் மகள் ஜனனிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. 

திருமண வரவேற்பு விழா, டிசம்பர் 11ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. வரவேற்பு விழாவுக்கான அழைப்பிதழை, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை நடிகர் ஜெயராம் சந்தித்து நேரில் வழங்கினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

varient
Night
Day