துப்பாக்கி முனையில் 5 தமிழர்கள் கடத்தல்... மாலியில் நிகழ்ந்த சம்பவம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ள 5 தமிழர்களை மீட்டு தரக்கோரி உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தள்ளனர். 

மாலியில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் பல்வேறு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் வேலை சென்றுள்ள வெளிநாட்டவர்களை குறிவைத்து கடத்தி பணம் பெற்று அவர்களை விடுவிடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கோப்ரி பகுதியில் மின்சார நிறுவனத்தில் பணிபுரியும் 5 இந்தியர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் தென்காசியை சேர்ந்தவர்கள் என்பதும், மற்ற மூன்று பேரும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தீவிரவாதிகளால் பிடித்து செல்லப்பட்டவர்களை மீட்க கோரி அவர்களுடைய குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தளபதி சுரேஷ் என்பவரின் தந்தை முருகேசன், தீவிரவாதிகள் பிடியில் உள்ள தனது மகனை மத்திய மாநில அரசுகள் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். 

Night
Day