பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி... ராமாயணத்தை இழுத்த துரைமுருகன்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளதாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு திமுக அமைச்சர் துரைமுருகன் மதத்தை தொடர்புப்படுத்தி பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன பேசினார் துரைமுருகன் விரிவாக பார்க்கலாம்...

திமுக-வில் வாயை வாடகைக்கு விட்டு சர்ச்சையில் சிக்கிக்கொள்வதில் மோஸ்ட் வாண்டட் லிஸ்டில் இருக்கும் துரைமுருகனின் அடுத்த தரமான சம்பவம் நடந்திருப்பது சட்டபேரவையில் என்பது தான் ஹைலைட்டே..! 

பொதுமேடைகளில் ஆபாசமாகவும் சர்ச்சையாகவும் வாக்களித்த மக்களையே இழிவுப்படுத்தி பேசுவதும் அவர்களை ஏலனப்படுத்துவதையும் பொழுது போக்காகவே செய்து வருகிறது திமுக. இப்படி திமுகவின் சிறந்த சர்ச்சை பேச்சு மன்னர்கள் என லிஸ்ட் எடுத்தால் அது ADDITIONAL PAPER கேட்கும் அளவுக்கு நீளும் என்பதுதான் உண்மை. இதில் பிரதான இடத்தில் இருப்பவரின் நிலைமை தற்போது ஐயோ பாவம் என்ற அளவுக்கு மாறியிருக்கிறது. 

இந்து மத குறியீடுகள் மீது ஆபாசத்தை ஏற்றி படுகொச்சையாக அருவருக்கதக்க வகையில் பேசிய பொன்முடி தான் அந்த பரிதாப நிலைக்கு சொந்தக்காரர். பெரும்பான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குறிய மத குறியீடுகளை சிறுமைப்படுத்தியும், பெண்களை மிக கேவலமாக இழிவுப்படுத்தியும் பொதுமேடையில் பெண்கள் முன்னிலையிலேயே கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் பொன்முடி பேசியது மக்களை கடும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியது. 

பெண்களே கூனிக்குறுகும் அளவுக்கான பேச்சை பேசிவிட்டு அமைச்சராக வலம் வந்த பொன்முடி, உயர்நீதிமன்றத்தின் நேரடி கோபத்துக்கு ஆளானதை தொடர்ந்து வேறுவழியே இல்லாமல் அவரது அமைச்சர் பதவியை பிடுங்கியது விளம்பர திமுக அரசு..

இதில் நூலிழையில் தப்பியவர்தான் நம்ம சர்ச்சை பேச்சு லிஸ்டின் மோஸ்ட் வாண்டட் நபரான அமைச்சர் துரைமுருகன். மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தி பேசிய விவகாரத்தில் பின்னங்கால் பிடரியில்பட ஓடோடி வந்து பகிரங்க மன்னிப்பு கேட்டு நூலிழையில் எஸ்கேப் ஆனார். இந்தநிலையில் தற்போது சட்டப்பேரவையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மதத்தை அடையாளப்படுத்தி அமைச்சர் துரைமுருகன் அளித்திருக்கும் பதில் தான் மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. 

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறுகிறது எனவும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது எனவும் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். இதற்கு விளம்பர அரசு பதிலளிப்பதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் யாருக்கும் எந்த அச்சமும் இல்லை என திமுகவின் வாய்ஸ் பீஸாக செயல்படும் சபாநாயகர் அப்பாவு வழக்கம் போல முந்திக்கொண்டு பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் ராமாயணத்திலே பெண்ணை தூக்கி சென்று விட்டான் என குறிப்பிட்டு பெண்களின் பாதுகாப்பற்ற சூழலோடு மதத்தை தொடர்புப்படுத்தி பதிலளித்தது தமிழகத்தின் பெரும்பான்மை சமூகத்தை மீண்டும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிக்கொண்டிருக்க, அது குறித்து பெண் எம்.எல்.ஏ எழுப்பிய கேள்விக்கு முறையாக பதிலளிப்பதற்கு மாறாக அமைச்சர் துரைமுருகன் அலட்சியப்போக்கில் மதத்தை தொடர்புப்படுத்தி பேசியதன் போக்கு இந்து மதத்தின் மீது திமுக கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமின்றி ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பில் ஒரு புல்லை கூட பிடுங்க முடியாமல் திறணற்று கிடக்கும் திமுக, உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை சுட்டிக்காட்டி சப்பை கட்டு கட்டியிருப்பது வெட்ககேடாகவே உள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கும் வேளையில் அதன் மீதான விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல், மதத்தை தொடர்புப்படுத்தி விமர்சனத்தை மடைமாற்றும் திமுக அமைச்சர் துரைமுருகனின் செயல் திமுக மீதான கோபத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 

varient
Night
Day