எழுத்தின் அளவு: அ+ அ- அ
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சேலையூர் ஏரியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வுக்கு வந்தபோது, ஏரிக்கரை ஓரங்களில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவை தூவி மாநகராட்சி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது அம்லமாகியுள்ளது. நம்பி வாக்களித்த மக்களின் கண்களில் மண்ணை தூவிய விளம்பர திமுக அரசு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நீர் நிலைகளில் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக சேலையூர் ஏரியை விளம்பர திமுக அரசின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு செய்ய வருகை தந்தார்.
அப்போது அமைச்சரின் வருகைக்காக சாலை மற்றும் ஏரிக்கரை ஓரங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. ஆனால் அதில் எந்தவித நெடியும் வராத நிலையில், தெளிக்கப்பட்டது ப்ளீச்சிங் பவுடர் அல்ல என்றும், மைதா மாவாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
மழைக்காலங்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் கிருமிகளை அழிக்கும் நோக்கில் ப்ளீச்சிங் பவுடர் சுகாதாரமற்ற இடங்களில் தெளிக்கப்பட்டு வரும் நிலையில், தாம்பரம் மாநகராட்சியில், பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது அமைச்சரின் வருகையின் போது ஏரிக்கரை ஓரங்களில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற பவுடர் கொட்டப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திணறியதை காணமுடிந்தது.
பின் சமாளிக்க முடியாமல், இதுகுறித்து ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என மழுப்பிவிட்டு சென்றது பொது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
ஒருகட்டத்தில் என்ன பேசுகிறோம் என்று புரியாமலேயே பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்பதற்கு பதிலாக நீர்வளத்துறை அதிகாரிகள் என புதிய விளக்கமளித்த அமைச்சரால் அதிகாரிகளும் திகைத்து நின்றனர்.
பொதுப்பணித்துறையே மாற்றி நீர்வளத்துறை எனக் கூறும் அமைச்சர் எப்படி ஏரிக்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மழைக்காலங்களில் சுகாதார சீர்கேடு எற்படக்கூடிய பகுதிகளில் கிருமி நாசினியாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வரும் நிலையில், சேலையூர் ஏரிக்கரையில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவு போன்ற வெள்ளை நிற மாவு துவப்பட்டதில் இருந்து விளம்பர திமுக அரசின் ஊழல் அம்பலமாகியுள்ளது என்றே சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.