சென்னை : திருப்பதிக்கு செல்லும் ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா அறிமுகம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள வாலாஜா சாலையில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு திருப்பதி ஆன்மீக சுற்றுலா குளிர்சாதன பேருந்து பயணத்தை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணியில் காலை உணவு வழங்கப்படுவதுடன், சிறப்பு தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வைப்பதுடன் நபர் ஒருவருக்கு லட்டு ஒன்றும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணியில் இரவு உணவும் வழங்கும் நிலையில் நபர் ஒன்றுக்கு 2ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Night
Day