11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

12-ம் வகுப்பு தேர்வு தொடங்கிய நிலையில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறவுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் மூன்றாயிரத்து 302 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதவுள்ளனர். மேலும் தனித்தேர்வர்கள் ஐந்தாயிரம் பேர் எனவும் சிறை கைதிகள் 187 பேர் தேர்வு எழுத உள்ளனா். இந்நிலையில், பொதுத்தேர்வுக்கான பணியில் 46 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 4 ஆயிரத்து 334 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வு துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தேர்வு அறைக்குள் செல்ஃபோன் உள்ளிட்ட மின்சாதனங்களுக்கு அனுமதி இல்லை எனவும் ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day