திருச்செந்தூர் பக்தர்களை அவமதித்த அமைச்சர் சேகர்பாபு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருந்த பக்தர்களை அமைச்சர் சேகர் பாபு அவமதித்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது பொது தரிசன அறையில் பக்தர்கள், அதிகாலை 5 மணி முதல் காத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் உணவு, குடிநீர் இன்றி தவிப்பதாக வேதனை தெரிவித்த நிலையில் இந்து அறநிலையத்துறை எந்த வசதியும்  செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்செந்தூருக்கு வருகை தந்த அமைச்சர் சேகர் பாபு திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருப்பான்... என தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை ஒருமையில் அவமரியாதையாக பேசிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Night
Day