திருவாரூர் தியாகராஜ சாமி கோயில் ஆழித்தேரோட்டம் வெகுவிமரிசையாக துவங்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் ஆழித்தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருவாரூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தியாகராஜர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுகான தேர்த் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம். இதையொட்டி திருவாரூர் நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day