எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின்முன், பாஜக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முடிவுக்கு வராததை என்பதை எடுத்துக் காட்டும் விதமாக ஆம் ஆத்மி கட்சி 'மகிளா அதாலத்' பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்கும்படி உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்திருந்தது. இதனை கண்டித்து, ஃபிரோஸ்ஷா சாலையில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் பாஜக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெண்களை உண்மையாக மதிக்க நினைத்தால், பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்களை கெஜ்ரிவால், தனது கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திய பாஜகவினர், அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ், பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்தவர்களை காப்பாற்றியர் என்றும் குற்றம்சாட்டினர்..