இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்கள் - அபராத தொகை செலுத்திய நிலையில் விடுவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்யப்பட்ட காரைக்காலை சேர்ந்த 13 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊர் திரும்பினார்கள். 


புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கிளிஞ்சல்மேட்டில் இருந்து 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர். இதில் செந்தமிழ் என்ற மீனவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு, இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட 13 மீனவர்களும், ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை கட்டிய நிலையில் இலங்கையில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தடைந்து காரைக்காலுக்கு திரும்பினா்.

varient
Night
Day