ஓடும் வேனில் 4 ஊழியர்கள் உடல் கருகி பலியான சம்பவத்தில் ஓட்டுநரின் சதிவேலையே காரணம் என விசாரணையில் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஓடும் வேனில் 4 ஊழியர்கள் உடல் கருகி பலியான சம்பவத்திற்கு ஓட்டுநரின் சதிவேலையே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


அங்குள்ள பிம்பிரி சிஞ்ச்வாட் ஹின்ஜேவாடி பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் 12 பேர் நேற்று முன்தினம் டெம்போ வேனியில் வேலைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது வேனின் முன்பகுதியில் ஓட்டுநர் இருக்கை அருகே திடீரென தீப்பிடித்ததில் 4 பேர் உடல் கருகி பலியாகினர். 8 பேர் தீக்காயமடைந்தனர். சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இது தீ விபத்து அல்ல, ஓட்டுநரின் சதிவேலையை காரணம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஓட்டுநர், தனது சம்பளம் குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், சம்பவத்தன்று ஊழியர்களை வேலைக்கு அழைத்து வந்த போது பென்சீன் என்ற ரசாயனம் தடவிய துணியில் அவர் தீப்பற்ற வைத்தது விசாரணையில் தெரியவந்தது. 

Night
Day