உலகம் இந்தியாவை அறிய விரும்புகிறது - NXT 2025 மாநாட்டில் பிரதமர் பெருமிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

'இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய, புதிய பதிவுகள் உருவாக்கப்படுவதால், செய்திகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


உலகளாவிய தலைவர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் ஒன்று கூடிய NXT 2025 மாநாடு படெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று உரையாடிய பிரதமர் மோடி, மகா கும்பமேளா போன்ற பெரிய அளவிலான நிகழ்வுகளை திறம்பட நடத்தும் இந்தியாவின் திறனை எடுத்துரைத்தார். மேலும், 'உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவிற்கு வர விரும்புவதுடன் இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்' என்றும் கூறினார். தொடர்ந்து, 'இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய, புதிய நேர்மறை பதிவுகள் உருவாக்கப்படுவதால், செய்திகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை' என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

Night
Day